முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
கேன்ஸ் திரைப்பட விழா தற்போது சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய சினிமா பிரபலங்கள் பலர் அதில் கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றன. ஹிந்தி சினிமா பிரபலங்கள், தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் அதில் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் கேன்ஸ் விழாவில் விதவிதமான ஆடைகளை அணிந்து போட்டோ ஷுட்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நடிகைகள் மட்டும்தான் போட்டோ ஷுட் நடத்த வேண்டுமா? எனக் கேட்பது போல் கமல்ஹாசனும் அங்கு நடத்திய ஒரு போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன. நரைத்த தலைமுடி, தாடி, மீசையுடன் கோட், கூலிங் கிளாஸ் அணிந்து கமல்ஹாசன் தோற்றமளிப்பது ஹாலிவுட் நடிகரைப் போல உள்ளது. அப்படியே ஹாலிவுட்டிற்கும் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு வாங்க தலைவா என அவர்களது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.