இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

டான் படத்தை அடுத்து அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்க போகிறார். இந்த நிலையில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் சிவகார்த்திகேயன். ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகி இருக்கும் அயலான் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏலியன் சம்பந்தப்பட்ட கதை என்பதால் விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அயலான் படத்தை இந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.