படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
மும்பையை சேர்ந்த மாடல் அழகியான பூஜா ஹெக்டே, முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்த அவர் மொகஞ்சரோதா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சமீபத்தில் அவர் பிரபாசுடன் நடித்த ராதே ஷ்யாம், விஜய்யுடன் நடித்த பீஸ்ட், சிரஞ்சீவியுடன் நடித்த ஆச்சார்யா படங்கள் அவருக்கு வரவேற்பை தரவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் கபி எனட் கபில் திவாலி, சிர்குஸ் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சோதனைகளை வென்று தீபிகா படுகோன் போன்று ஜெயிப்பேன் என்கிறார் பூஜா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வெற்றி, தோல்விகள் வாழ்க்கையில் சகஜம். அதை தாண்டி வருவதுதான் வாழ்க்கை. இப்போது பாலிவுட்டில் நிறைய படங்களில் நடிக்கிறேன். இதற்கு முன்பு பல பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தேர்வானேன். ஆனால் அந்த படங்களிலிருந்து திடீரென நீக்கப்பட்டேன். அப்போது எனக்கு காரணம் தெரியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சம்பவங்களுக்கு பின்னால் இந்த விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.
பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் மற்ற நடிகர், நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. எனக்கும் அப்படித்தான். ஆனாலும் தீபிகா படுகோன், கத்ரினா கைப் உள்ளிட்டோர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைப்போன்று நானும் ஜெயிப்பேன். என்கிறார் பூஜா.