குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பான 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படம் நேற்று இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. மார்வெல் படம் என்றாலே சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
'அவஞ்சர்ஸ்' கதாபாத்திரங்களில் ஒன்றான 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' கதாபாத்திரத்தின் இரண்டாவது பாகப் படம் இது. இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவில் வசூல் கிடைத்துள்ளது. நேற்று முதல் நாளில் மட்டும் 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிவிடும் என்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் படங்களும் இந்தியாவில் நல்ல வசூலைக் குவிக்கின்றன. அந்த விதத்தில் 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படம் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2019ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' 53 கோடி வசூலுடன் முதலிடத்திலும், 2021ல் வெளிவந்த 'ஸ்பைடர் மேன்' படம் 32 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், 2018ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் 31 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.