விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருக்கும் படம் o2. த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் பேருந்தில் பயணம் செய்கிறாள். அவளது மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் அவனுடன் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். அந்த பஸ் ஒரு விபத்தில் சிக்குகிறது. அப்போது பஸ்சுக்குள் இருக்கும் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை. அந்த பெண்ணின் மகனிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை அபகரிக்க அனைவரும் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் அவள் தன் மகனை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தாய் பார்வதியாக நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது என்றார்.




