'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி மற்றும் பூவே பூச்சூடவா தொடர்களின் நாயகிகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் தான் இருவருக்குமே திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஷபானா விஜய் டிவியில் நடித்து வந்த ஆர்யனையும், ரேஷ்மா தன்னுடன் நடித்த மதன் பாண்டியனையும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆப் ஸ்க்ரீனில் நல்ல நட்புடன் பழகி வரும் இந்த இரு தம்பதிகளும் தற்போது ஒன்றாக ஊர் சுற்றி வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரேஷ்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இரு நடிகைகளுமே பகிர்ந்துள்ளனர். அதில் ரேஷ்மா மற்றும் ஷபானா ஒரே மாதிரியான ஆடை அணிந்து நெருக்கமான நட்புடன் அனைத்துக் கொண்டுள்ளனர். அந்த பதிவில் ஷபானா ரேஷ்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் இந்த இரு நடிகைகளுடன் அவர்களது கணவர்கள் மதன் மற்றும் ஆர்யனும் உடன் நிற்க, மறக்க முடியாத தினம் என கேப்ஷனில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் என்ன ஜோடியாக ஹனிமூன் கொண்டாட்டமா? என நக்கல் அடித்து வருகின்றனர்.