பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! |

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்து இயக்கும் படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவர்களுடன் வடிவேலு, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.




