ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛மாமன்னன்'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது வரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வடிவேலு பேசியதாவது : ‛‛இவ்வளவு நாட்களாக ஒரு காமெடி நடிகனாக நடித்தேன். நாய்சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 படங்களுக்கு பின் கமிட்டான படம் இந்த மாமன்னன். இந்த கதையை கேட்க சொல்லி மாரி செல்வராஜை அனுப்பி வைத்தார் உதயநிதி. ஒரு வரி கதையை மாரி சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்பிற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை. படம் முழுக்க முழுக்க சீரியஸான கதை. இந்த படத்திற்கு மாமன்னன் மாரி செல்வராஜ் தான். இந்த கதையை ஒப்புக் கொண்ட உதயநிதி மன்னாதி மன்னன்.
20 - 30 படம் பண்ண அனுபவத்தை மாரி செல்வராஜிடம் நான் பார்த்தேன். வாழ்க்கையில் பசி, பட்டினி எல்லாம் நான் பார்த்து வந்தவன். அதேமாதிரி தான் மாரி செல்வராஜூம்... அந்த வலியை எல்லாம் கடந்து வந்துள்ளார். அதனால் அவருடன் சுலபமாக என்னால் கனெக்ட் ஆக முடிந்தது. அவருடைய வலி உடன் மற்றவர்களின் வலியையும் சேர்த்ததால் அது அனைவருக்கும் பொருந்தியது.
என்னை சிரிக்கக் கூடாது என கண்டிஷன் போட்ட ஒரே படம் இது தான். எங்கேயும் சிரிக்க கூடாது என இயக்குனர் சொல்லிவிட்டார். அதனால் எனக்குள் ஒரு சவாலை நான் உருவாக்கி கொண்டேன். எந்த இடத்திலேயும் யாரையும் சிரிக்க வைத்து விடக்கூடாது என நான் போராடினேன்.
இந்த படத்தை பார்த்துவிட்டு இரவு 11மணிக்கு முதல்வர் போன் பண்ணி என்னை பாராட்டினார். ரஜினி, கமல் என பலரும் பாராட்டினார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் நான் நடித்துள்ளேன். இது என் வாழ்க்கையிலும் நடந்தது தான். இந்த படத்தில் நடிக்க பயந்து அந்த வாய்ப்பை இழக்க பார்த்தேன்.
இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ கிடையாது. எல்லோரும் ஹீரோ தான். எல்லாவற்றுக்கும் மேல் மாரி செல்வராஜ் தான் முக்கியமான ஹீரோ. அவருடைய வயதுக்கு மீறிய படம் இது. இதற்கு ஒத்துழைப்பு தந்தது உதயநிதி மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம். இந்த மாதிரி ஒரு வெற்றி படத்தை கொடுத்த மக்களுக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
52 கோடி வசூல்
சக்சஸ் மீட்டில் பேசிய இந்த படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி, இந்த படம் வெளியாகி 9 நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூலித்துள்ளதாக நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.