வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா | விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு நடித்த படம் 'மாமன்னன்'. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரையுலகில் இருந்து விலகும் உதயநிதிக்கு முக்கியமான படமாகவும் அமைந்தது.
இந்த படத்தை 'நாயகடு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். சுரேஷ் புரொடக்ஷன் மற்றும் ஏசியன் மல்டிபிளக்ஸ் இணைந்து தெலுங்கு பதிப்பை வெளியிட்டது.
'நாயகடு'வெளியான தேதியில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'பேபி' படம் வெளியானது. அதோடு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் 'மாவீரடு' என்ற பெயரில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் 'மாமன்னன்' படத்தை தெலுங்கு ரசிகர்கள் கவனிக்கவில்லை. அதோடு வருகிற 27ம் தேதி படம் ஓடிடியில் வெளியாவதால் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர். இதுபோன்ற குழப்பத்தால் மாமன்னன் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.