ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் கொலை. விடியுமுன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாளை (21ம் தேதி) படம் வெளிவருகிறது.
படத்தில் நடித்திருப்பது பற்றி ரித்திகா சிங் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகிறது. 'கொலை' படத்தில் எனக்கு புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள்.
கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும். அதே நேரத்தில், அவள் தனது மூத்த அதிகாரிகளுடன் அலுவல் ரீதியான தொல்லைக்கும் ஆளாகிறாள். இது அவளுடைய நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. அதையும் அவள் சமாளித்து எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் உள்ள திருப்பங்கள் பார்வையாளர்களின் யூகங்களை நிச்சயம் உடைக்கும். என்கிறார் ரித்திகா சிங்.




