சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

பிரபுவின் ஆரம்பகாலத்தில் சிவாஜியுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். இவர்களின் காம்பினேஷனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தயாரிப்பாளர்களும் அதனை விரும்பினர். சிவாஜி, பிரபு இருவரும் அப்பா மகனாக நிறைய படங்களில் நடித்துள்ளனர், போலீசாக இருவரும் நிறைய படங்களில் நடித்துள்ளனர்.
ஒரே படத்தில் அப்பா, மகனாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் நடித்த படம் 'நீதியின் நிழல்'. எம்.என்.நம்பியார் கொடூர வில்லன், ஏழைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அந்த மணப்பெண்ணை வெளிநாட்டுக்கு விற்பனை செய்கிறவர். அவரது அடியாட்களாக சத்யராஜ், ஜெயசந்திரன் இருப்பார்கள். அவர்களை எதிர்த்து போலீஸ் அதிகாரியான சிவாஜி போராடுவார், ஆனால் அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் உட்காரவைக்கப்பட்டு விடுவார்.
வெளியூரில் படிக்கும் மகன் பிரபு வந்து அவரும் போலீசாகி நம்பியார் கூட்டத்தை அழிப்பதுதான் கதை. பிரபு ஜோடியாக ராதா நடித்திருந்தார். பாரதி- வாசு இயக்கி இருந்தனர். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது.