இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
1952ம் ஆண்டு வெளிவந்த படம் 'மாப்பிள்ளை'. டி. ஆர். ரகுநாத் இயக்கினார். டி.ஆர்.ராமச்சந்திரன், பி.வி. நரசிம்ம பாரதி, வி.கே.ராமசாமி, பி.கே. சரஸ்வதி, டி.கே.ராமச்சந்திரன், பி.எஸ். வீரப்பா, எம்.என்.ராஜம், எம்.லட்சுமிபிரபா, வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, எம்.எஸ்.எஸ்.பாக்யம், கே.லட்சுமிகாந்தம், ராகினி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன், ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் டி.கே. புஷ்பவல்லி ஆகியோர் நடித்தனர்.
ஒரு அச்சகத்தில் அலுவலகப் பையனாக வேலைப் பார்க்கும் ஏழை (டி. ஆர். ராமச்சந்திரன்) திடீர் பணக்காரனாக மாறுகிறான். அவன் வேலைபார்த்த அச்சக முதலாளியின் மகன் (டி.கே.ராமச்சந்திரன்) புதுப்பணக்காரனை அழித்து அவனது சொத்துக்களை அபகரிக்க சபதம் செய்கிறான். அது நடந்ததா இல்லையா என்பதே கதை.
இந்த படம் வெளியானபோது படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு புதுமையை செய்தது. அப்போது ஒரு சர்க்கசின் சாகச நிகழ்ச்சிகள் வண்ணக்கலரில் படமாக்கபபட்டு குறும்படமாக வந்திருந்தது. அந்த படத்தின் உரிமத்தை வாங்கி 'மாப்பிள்ளை' படத்தின் இடையே அதை சேர்த்து, அதையே விளம்பரமாக்கி படத்தை வெளியிட்டது. மக்கள் அந்த சர்க்கஸ் காட்சிகளை காண்பதற்காகவே தியேட்டருக்கு படை எடுத்தனர் படமும் வெற்றி பெற்றது.