காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிராஜக்ட் கே'. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு, மற்ற அப்டேட்டுகள் இன்று வெளியாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் விழாவில் அது பற்றி வெளியிடுகிறார்கள்.
இதனிடையே, இப்படத்திற்கான பிரபாஸ் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறது. போஸ்டர் சரியாக டிசைன் செய்யப்படவில்லை, பிரபாஸ் தோற்றம் நன்றாக இல்லை, 'அயர்ன்மேன்' போஸ்டரையும், 'பதான்' போஸ்டரையும் காப்பி அடித்துள்ளார்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபாஸ் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஆதி புருஷ்' படத்தின் முதல் அப்டேட் வந்த போது இப்படியான கடுமையான விமர்சனங்கள்தான் வந்தது. அது போலவே 'புராஜக்ட் கே' படத்திற்கும் வருவது பிரபாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இருந்தாலும் அடுத்த வரும் அப்டேட்டுகள் தரமாக இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனிடையே முதலில் வெளியான போஸ்டரை படக்குழு 'டெலிட்' செய்துவிட்டது. அதற்குப் பதிலாக பின்னணி எதுவும் இல்லாமல் பிரபாஸ் மட்டுமே இருக்கும் போஸ்டரை மாற்றி வெளியிட்டுள்ளார்கள். ரசிகர்களின் மோசமான கமெண்ட்டுகள்தான் போஸ்டர் மாற்றத்திற்குக் காரணம். ஆரம்பமே இப்படியா என்று பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இன்று வெளியாக உள்ள தலைப்பு அறிவிப்பு, வீடியோக்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.