ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்திற்கான வியாபாரம் ஆரம்பமாகி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
இப்படத்திற்காகத் தயாரிப்பாளர் நிர்ணயித்திருக்கும் விலை, 'வாரிசு' படத்தின் விலையை விட 'டபுள்' மடங்காக இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. 'வாரிசு' படமே பல ஏரியாக்களில் திருப்தியான வசூலை எட்டாமல் நஷ்டமடைந்ததாக சொல்லப்படும் நிலையில், 'லியோ' படத்திற்கு இவ்வளவு விலையா என அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
லோகேஷின் முந்தைய படமான 'விக்ரம்' படத்தின் வசூல், விஜய்யின் மார்க்கெட் நிலவரம், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஆகியவற்றைச் சொல்லித்தான் தயாரிப்பாளர் தரப்பில் வியாபாரம் பேசுகிறார்களாம். 'விக்ரம்' படத்தை விடவும் 'லியோ' படம் அதிக வசூலிக்கும் என நம்பிக்கை தருகிறார்களாம். ஆனாலும், வினியோகஸ்தர்கள் தயங்கி வருவதாகத் தகவல். அதே சமயம் இப்படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட ரெட் ஜெயன்ட் நிறுவனமும் முயற்சித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்படும் நிலையில் 'லியோ' படத்தின் வரவேற்பு, வெற்றி, வசூல் ஆகியவை விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும்.