'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இதையடுத்து ஹிந்தி படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேப்போல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டும் அல்லாமல் முதன்மை கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்தாண்டு வெளிவந்த சில படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தாண்டு அவருக்கு தெலுங்கில் நானியின் ஜோடியாக நடித்த ‛தசரா', தமிழில் வெளிவந்த ‛மாமன்னன்' படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியுள்ளது. அடுத்து ஹிந்தி சினிமாவிலும் கீர்த்தி சுரேஷ் என்ட்ரி ஆக உள்ளதால் இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்தவர் இப்போது ரூ.3 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.