இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2' | சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 29ம் தேதி வெளியான படம் 'மாமன்னன்'. உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்ட இந்தப் படம் 50 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது.
ஏற்கெனவே, இப்படத்தின் சக்சஸ் மீட்டை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினார்கள். அப்போதே படத்தின் 50வது நாள் விழா நடக்கும் என்று அறிவித்தார்கள். அதன்படி இன்று(ஆக., 17) மாலை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விழா நடைபெற உள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் விருதுகளை வழங்க உள்ளார்களாம்.
இப்படத்தில் வில்லனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய பஹத் பாசில் இப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. இன்று நடைபெற உள்ள 50வது நாள் விழாவிலாவது அவர் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.