'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு நடித்த மாமன்னன் படம் வெளியாகி நேற்றுடன் 50நாள் ஆனது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடியது. படத்தில் பணியாற்றிவர்கள், படத்தை திரையிட்டவர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மாமன்னன் படம் தொடங்கப்பட்டபோதே இந்த படம் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினேன். இயக்குனர் மாரி செல்வராஜ் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கினார். படப்பிடிப்பில் இரண்டு முறை எனக்கு அடிபட்டது. ஹீரோவுக்கு அடிபட்டால் படம் வெற்றி பெறும் என்று கீர்த்தி சொன்னார். அதுபோலவே வெற்றி பெற்றது.
வடிவேலு இந்த படத்தில் நடிக்க முன்வந்திருக்கா விட்டால் இந்த படத்தை கைவிட்டு வேறு படம் செய்திருப்போம். பஹத் பாசில் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
எனது முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றி பெற்றதும், கடைசி படமான மாமன்னன் வெற்றி பெற்றதும் மறக்க முடியாத அனுபவங்கள். இன்னும் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும் இனி நடிப்பதாக இல்லை. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.