நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சந்தானம் நடித்த ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற படம் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்றது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தானத்திற்கு இந்தபடம் வெற்றியை தந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள இன்னொரு படமாக ‛கிக்' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் சந்தானத்துடன் தன்யா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பரமானந்தம் உள்பட பலர் நடித்துள்ளார்கள். பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சந்தானத்தின் வழக்கமான காமெடி, ரொமான்ஸ் கலந்த காட்சிகளாக இடம் பெற்றிருக்கும் இந்த டிரைலரில், பப்புக்குள்ளே போக பொண்ணுங்க இல்லைன்னா நோ என்ட்ரி இதுதான் ஜனநாயகமா?, நான் இல்லாதபோது என் ஆளு மேல கைய வச்சியாமே என்று சந்தானம் பேசி நடித்துள்ள சில ஜாலியான காட்சிகளோடு, தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ள காட்சிகளும் கலகலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த படம் காமெடி பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.