2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'கிடாரி', ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடரான 'குயின்' ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'மத்தகம்' வெப் தொடர் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடர் பல சீசன்களாக வெளிவரும் என்று அதர்வா கூறினார்.
தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது "மத்தகம் 2018, 19ல் ஆரம்பிச்சது. கவுதம் மேனன் சார் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக்காரணம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தான். அவங்களுக்கு ரொம்ப நன்றி.
பிரசாத் இந்தக் கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும்.
இந்த தொடருக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும், அடுத்தடுத்த சீசன்களை உருவாக்கும் வகையில் கதைகளை எழுதி தயாராக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாத். நானும், இந்த டீமும் தொடர்ந்து பயணிக்கும் ஆவலுடன் இருக்கிறோம். ஆங்கில தொடர்களை போன்று இதுவும் பல சீசன்கள் உருவாகும்" என்றார்.