சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று தமிழகத்தில் இரண்டாவது வாரத்தில் 450 திரைகளில் ஓடி வருகிறது.
தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் நாயக்குடு என்ற பெயரில் டப்பிங் செய்து ஜூலை 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு பதிப்பில் சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டிரைலரை நேற்று நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் வெளியிட்டனர்.