என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அருண் ராஜா காமராஜ், இன்னொரு பக்கம் பாடல் எழுதுவது, பின்னணி பாடுவது என்று கவனம் செலுத்தி  வந்தார். ஒரு கட்டத்தில் கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களையும் இயக்கினார். தற்போது அவர் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர்  படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் வரவேற்புபை பெற்று வருகிறது. 
இந்த நிலையில் தான் அளித்த  ஒரு பேட்டியில், இந்த ஜெயிலர் படத்தில் நடனம் சார்ந்த ஒரு சூழலுக்கு பாடல் எழுத வேண்டும் என்று என்னை அழைத்த இசையமைப்பாளர் அனிருத், தெலுங்கு வார்த்தைகளும் கலந்து எழுத வேண்டும் என்று கூறினார். அதனால்  இந்த பாடலில் ஆங்காங்கே தெலுங்கு வார்த்தைகளையும் கலந்து அரை மணி நேரத்தில் எழுதி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. பாடல் சிறப்பாக உள்ளது, கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்னார் அனிருத். அவர் சொன்னது போலவே தற்போது காவாலா  பாடல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நான் எழுதிய நெருப்புடா பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு அவரது காலா படத்திலும் பாடல் எழுதினேன்.  இப்போது ஜெயிலர் படத்திலும் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் அருண் ராஜா காமராஜ்.
 
           
             
           
             
           
             
           
            