ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நட்சத்திரம் நகர்கிறது படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பா.ரஞ்சித். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் விக்ரம் நடிப்பில் மகான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விரைவில் விக்ரமை இயக்கும் படத்தை தொடரப் போகிறார் பா.ரஞ்சித். ஆனால் இந்த படத்தின் கதையை கார்த்திக் நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய போதே விக்ரம் இடத்தில் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் பா.ரஞ்சித். ஆனால் அதையடுத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினி படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் விக்ரமை இயக்குவதை அப்போது தள்ளி வைத்திருக்கிறார். அதன் காரணமாக எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏற்கனவே விக்ரம் இடத்தில் சொன்ன அந்த கதையை படமாக்க தயாராகி வருகிறார் பா. ரஞ்சித்.