ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியாவில் தொலைக்காட்சி என்ற தொழில்நுட்ப சாதனம் பரவலாக வந்தபோது தூர்தர்ஷன் நெட்வொர்க்கின் பிராந்திய மொழி சேனல்கள் மட்டுமே இருந்தது. 90 களில் பிரபலமான சேனலாக வலம் வந்த இந்த தொலைக்காட்சியில் இன்று வரை மிகவும் தரமான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருவது தனி விஷயம்.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குழந்தைகளை கட்டிப்போட்ட பேவரைட்டான ஷோ என்றால் அது சக்திமான் தான். இவர் தான் நமது இந்தியன் சூப்பர் ஹீரோ. தீபாவளி நாட்களில் சக்தி மான் டிரெஸ்ஸை வாங்கி போட்டுக்கொண்டு ஒரு கையை மேலே தூக்கி சுத்தி சுத்தி விளையாடியதை புன் சிரிப்புடன் நினைத்து பார்த்த அன்றைய கிட்ஸ்களுக்கு தற்போது இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சக்திமான் தற்போது மீண்டும் திரைப்படமாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அசத்தலான டீசரை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், 'மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிரம்பியுள்ளதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது' என டீசரில் குறிப்பிட்டுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த டீசரை 90ஸ் கிட்ஸ்கள் பார்த்துவிட்டு 'இப்ப வரச்சொல்லுங்கடா மார்வெல் அவெஞ்சர்ஸ' என சவால் விட்டு கொண்டாடி வருகின்றனர்