என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் | சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் | சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா | மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ் | சிவராஜ்குமாருக்கு கர்நாடக முதல்வர் வாழ்த்து |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதனை நயன்தாராவுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை.
முக்கோண காதல் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கண்மணி எனும் நயன்தாரா, கதிஜா எனும் சமந்தா ஆகிய இரண்டு பேரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுக்கு இடையேயான பயணத்தை உணர்வுகளுடன் காமெடி, ரொமான்ஸ் கலந்து இயக்கி உள்ளார் விக்னேஷ் சிவன் என டீசரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போது இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் டீசரின் முடிவில் அறிவித்துள்ளனர். அதன்படி படம் வருகிற ஏப்., 28ல் தியேட்டர்களில் வெளியாகிறது.




