ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' |
நடிகர் அஜித் - இயக்குனர் வினோத் - தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள படம் ‛வலிமை'. ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பிரச்னை எழ ரிலீஸ் தள்ளிப்போனது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து வருகிற பிப்., 24ல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் டப்பாகி வெளியாக உள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் பாடல்கள், டிரைலர்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வினோத், நடிகர் அஜித் மற்றும் சவுண்ட் இன்ஜினியர் ஆகியோர் இருக்கும் போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மூவரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதோடு சில கரெக்ஷன்கள் மேற்கொள்ளப்பட்டு படத்தை மூவரும் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் மூவரின் பின்னணியில் பெரிய திரையில் வலிமை பட டைட்டில் உடன் படத்தின் ரன்னிங் டைம்மாக 2 மணிநேரம் 35 நிமிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.