இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
விஷாலுக்கும், சண்டைக்காட்சிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். சண்டை காட்சியில் காயம் ஏற்படுவது அவருக்கு அடிக்கடி நடக்கிறது. அவர் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படம் வெளியாகி தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக லத்தி படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஐதராபாத்தில் உள்ள ஒரு கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தில் நடந்தது. சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சியை இயக்கினார். வில்லன்கள் துரத்தி வரும்போது விஷால் ஒரு கை குழந்தையுடன் கட்டடத்தில் இருந்து குதிப்பது மாதிரியான காட்சி படமாக்கப்பட்டது. அப்படி குதிக்கும்போது டைமிங் கோளாறு காரணமாக சுவரில் மோதி கையில் காயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடித்தார்.
ஒரு கட்டத்தில் அவரால் நடிக்க முடியாமல் போகவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் விஷாலுக்கு ரத்த காயத்தை விட உள்காயம் பெரிதாக ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர்களும், விஷாலின் நண்பர்களுமான ரமாணாவும், நந்தாவும் அறிவித்திருக்கிறார்கள். விஷால் சிகிச்சைக்காக கேரளா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குணமாகி வந்ததும் அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடர உள்ளனர்.