டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

சென்னையில் நடந்த விக்ரம்பிரபுவின் 'லவ் மேரேஜ்' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தங்கை கணவரான இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் 'விக்ரம்பிரபு வில்லனாக நடிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். ஏன் அவர் அப்படி பேசினார் என்று விவாதம் எழுந்துள்ளது. 'குட் பேட் அக்லி' படத்துக்குபின் மீண்டும் அஜித்தை வைத்து படம் பண்ணுகிறார் ஆதிக். அந்த படத்தில் வில்லன் வேடத்தில் விக்ரம்பிரபுவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாரா? அதற்காக இப்படி பிட் போட்டாரா என்று பலர் சந்தேகப்படுகிறார்கள்.
குட் பேட் அக்லி படத்தில் அர்ஜூன்தாஸ் வில்லனாக வந்தார். அதற்குமுன்பு அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் ஆரவ் வில்லனாக வந்தார். இரண்டு பேருமே ஹீரோவாக நடித்தவர்கள், அஜித்துக்காக வில்லனாக மாறினார்கள். அந்தவகையில் இப்போது ஹீரோவாக நடிக்கும் விக்ரம்பிரபு வில்லனாக மாறுவாரா அல்லது மறுப்பாரா என தெரியவில்லை. இதுவரை நுாற்றுக்கணக்கான படங்களில் நடித்த அவரது தந்தை பிரபு, வில்லனாக நடித்தது இல்லை. அப்பா வழியை மகன் பின்பற்றுவாரா? மச்சான் வேண்டுகோளை ஏற்பாரா என்பது போகப்போக தெரிய வரும்.