'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

கன்னடத் திரையுலகின் மாஸ் ஹீரோவாக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.
அவர் கடைசியாக நடித்து முடித்திருந்த படம் 'ஜேம்ஸ்'. அப்படத்திற்கு டப்பிங் பேசுவதற்கு முன்பே அவர் மரணமடைந்துவிட்டார். அதனால், தனது தம்பிக்காக அண்ணன் நடிகர் சிவராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளார்..
நேற்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் இது குறித்து சிவராஜ்குமார் பேசுகையில், “எனது தம்பியின் படத்திற்கு டப்பிங் பேசுவது ஒரு எமோஷனலான நிகழ்வு. திரையில் அப்புவை (புனித்) பார்த்துக் கொண்டு டப்பிங் பேசுவது கஷ்டமாக உள்ளது. அவரது குரலுக்குப் பொருத்தமாகப் பேசுவதும் கடினம் தான். அதற்கு எனக்கு இரண்டரை நாட்களக் ஆனது. தற்போது டப்பிங்கை முடித்துவிட்டேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்து பேசியுள்ளேன், ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் என நம்புகிறேன். என்னிடம் படக்குழு வைத்த இந்த வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை,” என்றும் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படம் புனித் ராஜ்குமார் பிறந்தநாளான மார்ச் 17ம் தேதி வெளியாகிறது. அன்று முதல் அதற்கடுத்த ஒரு வாரத்திற்கு கர்நாடகாவில் வேறு படங்களைத் திரையிடுவதில்லை என வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். பிரியா ஆனந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.