ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
கன்னட நடிகரும், 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவருமான சிவராஜ்குமார் நேற்று ஐதராபாத்திற்குச் சென்று சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து சிரஞ்சீவி, “என்னை வாழ்த்துவதற்காக பெங்களூருவிலிருந்து வந்த சிவராஜ்குமார் என் மனதைத் தொட்டுவிட்டார். அவருடன் மதிய உணவு அருந்தி, எங்களது தொடர்புகளை நினைவுபடுத்தி சில மணிநேரம் செலவிட்டோம். அவருடைய அப்பா சாதனையாளர் ராஜ்குமார் அவர்கள் குறித்தும், அவர்களது மொத்த குடும்பம் குறித்தும் பல மறக்க முடியாத பாசமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.