ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை |
சினிமா என்பது கடல் போல, உடனே வாய்ப்புகள் வராது, பொறுமை மிக முக்கியம் என்கிறார் புதுமுக நடிகை ஜீவிதா. சென்னையை சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் அவர் ‛தினமலர்' இணையதளத்திற்கு அளித்த பேட்டி இதோ...
* உங்களைப் பற்றி?
நான் சென்னை பொண்ணு. அப்பா தெலுங்கு, அம்மா தமிழ். நான் எம்பிஏ முடிச்சு இருக்கேன். படிக்கும்போது என் நண்பர்கள் எல்லாம் விஸ்காம் படிச்சாங்க, அவங்க என்னை மாடலாக போட்டோஸ் எடுத்தாங்க. அதுவே என்னை சினிமாவில் நடிக்க ஆசையை ஏற்படுத்தியது.
* சினிமா வாய்ப்பு?
மாடலிங்கில் என் போட்டோவை பார்த்து சினிமா பட வாய்ப்பு வந்தது. இரண்டு தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கேன். காக்கா முட்டை மணிகண்டன் உதவியாளர் சரண் இயக்கும் ‛வெள்ளை குதிரை' மற்றும் இன்னொரு படத்தில் நடிக்கிறேன். கர்மா என்ற ஹிந்தி வெப்சீரிஸிலும் நடிக்கிறேன்.
* டான்ஸ், நடிப்பு பயிற்சி எடுத்தீங்களா?
தனியாக சென்று பயிற்சி எடுக்கல. நிறைய படங்கள் பார்ப்பேன். முன்னணி நடிகைகள் எப்படி நடிக்குறாங்க, எப்படி வசனம் பேசுறாங்க... என எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்வேன். பாலே, வெஸ்டர்ன் டான்ஸ் தெரியும்.
* என்னென்ன மொழிகள் தெரியும்?
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவேன். என் அம்மா என்னை வங்கி வேலைக்கு அனுப்ப ஆசைப்பட்டார். அதற்காக நானும் இதுபோன்ற பிறமொழிகளை கற்றேன்.
* உங்க ரோல் மாடல் யார்?
முதலில் என் அம்மா தான் எனக்கு ரோல் மாடல். நடிப்பில் சுஷ்மிதா சென் எனக்கு மிகவும் பிடிக்கும்.
* உங்க அப்பா, அம்மா என்ன வேலை பார்க்கிறாங்க..
அம்மா எங்கும் வேலை பார்க்கவில்லை. சிங்கிள் உமன். ஒரு ஆண் இல்லமா எப்படி வாழ முடியும். குழந்தைகளை எப்படி வளர்க்கணும் வாழ்க்கையை எப்படி வாழணும் என்று எங்களுக்கு சொல்லி கொடுத்தாங்க. நான் என் அக்கா 2 பேர். என் அப்பா போன பிறகு எந்த ஒரு கஷ்டத்தில் ஒரு கடன் வாங்கமால் எங்களை வளர்த்தாங்க. தைரியமானவங்க, எவ்ளோ பிரச்னை என்றாலும் வீட்டில் அழலாம் ஆனால் வெளியில் காட்டிக்கக் கூடாது என்று சொல்வாங்க. ஒருவேளை சாப்பாடு இல்லைன்னாலும் பட்டினியால் கூட இருக்கலாம், யார்கிடவும் கை நீட்டி காசு வாங்க கூடாது. அப்படி வாங்கி வீடு வாசல் வந்து அசிங்கபடுத்துவாங்க, அந்த பெயரை வாங்கிடாதீங்க என்று என் அம்மா சொல்லி கொடுத்தாங்க.
* சின்னத்திரை வாய்ப்புகள் வருதா?
நிறைய பெரிய சீரியல்கள் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நான் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதால் அந்த பக்கம் செல்லவில்லை.
* எந்த இயக்குனர் படங்களில் நடிக்க ஆசை?
நிறைய இயக்குனர்கள் இங்க இருக்காங்க. அனைவரின் படத்திலும் நடிக்கணும்னு ஆசை இருக்கு. முதலில் நான் ஒரு நடிகையாக நல்லா நடிப்பேன் என்று நிரூபிக்கணும். அதற்காக நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.
* சமீபத்தில் நீங்க பார்த்த படங்களில் உங்களை கவர்ந்த நடிகர் யார்?
ஜோஜூ ஜார்ஜ். அவர் நடித்த பனி படம் பார்த்தேன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். தமிழிலும் அவர் நடித்த படங்கள் எனக்கு பிடிக்கும்.
* எதிர்காலத்தில் நடிப்பு தவிர வேற என்ன ஆசை இருக்கு?
படம் இயக்கவும் ஆசை இருக்கு. ஏதாவது ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஆசை இருக்கு. பார்க்கலாம்
* உங்களை போல சினிமாவுக்கு வரும் புது முகங்களுக்கு சொல்ல விரும்புவது?
சினிமா ஒரு கடல் போல. வந்த உடனே வாய்ப்புக்கள் கொட்டி தர மாட்டாங்க. நாம காத்திருக்கணும், பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம். நிறைய பட வாய்ப்பு வந்து வெற்றி பெற்று, நான்கைந்து படங்களில் நடித்து வீடு, கார் வாங்கணும், சம்பாதிக்கனும் என்ற ஆசை இருக்கணும். ஆனால் நமக்கான காலம் வரும் வரை நாம் பொறுமையாக காத்திருக்கணும். இதைத்தான் நான் கடைபிடிக்கிறேன், அதையே மற்றவங்களுக்கும் சொல்கிறேன்.