'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மதராஸி'. இப்படத்தின் தமிழக உரிமையை வேல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுமார் 40 கோடி கொடுத்து அந்த உரிமையை வாங்கியுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'அமரன்' திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை மனதில் வைத்து இந்தப் படத்தின் வியாபாரம் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். படத்தை வேல்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தாலும் அவர்கள் கமிஷன் அடிப்படையில் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம்.
கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்குச் சென்றுவிடும். இப்படித்தான் 'அமரன்' திரைப்படத்தின் வியாபாரமும் நடந்தது. சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அதனால்தான், இந்தப் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.