ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை |
தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னையில் இன்று(ஆக., 21) அளித்த பேட்டி : ‛‛எனது பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளேன். குறிப்பாக செப்டம்பர் மாதம் ‛உயிருள்ள வரை உஷா' படத்தை வெளியிடுகிறேன். டிஜிட்டலில் புது பொலிவுடன் படம் ரிலீஸ் ஆகிறது. அடுத்து ஒரு தலைராகம், மைதிலி என் காதலி உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸாகின்றன.
ரஜினி நடிக்க மறுப்பு
உயிர் உள்ள வரை உஷா படத்தை எடுத்தபோது எனது நண்பரான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அந்த படத்தில் நான் நடித்த செயின் ஜெயபால் வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அப்போது கதையைக் கேட்டு நடிப்பதற்கு சம்மதித்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தில் தான் நான் நடிப்பேன் என்று கூறிவிட்டார்.
அப்போது புது நிறுவனமாக இருந்த எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தான் அந்த படத்தை நான் தயாரிக்க திட்டமிட்டு இருந்தேன். அதனால் நான் பிரபலமான நிறுவனமான பிறகு உங்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதனை இப்போது தான் இதை தெரிவிக்கிறேன்
அரசியல் பேசி நண்பர்களை இழக்க விரும்பவில்லை
தமிழ் திரை உலகில் எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். அரசியல் காரணங்களால் விஜயகாந்த் உடான நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் எனது மகன் சிலம்பரசன் தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தார். விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கிறீர்கள். அவர் எனது நல்ல நண்பர். இதைத் தாண்டி அரசியல் பற்றி எதுவும் தற்போது பேச விரும்பவில்லை. அரசியல் பற்றி பேசி எனது சினிமா நண்பர்களை இழக்கவும் நான் விரும்பவில்லை.
திமுகவில் இருந்த நான் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லக்கூடாது என்று முடிவெடுத்து தான் லட்சிய திமுகவை உருவாக்கினேன். லட்சிய திமுக எனக்கு நானே கட்டி கட்டிக் கொண்ட தாலி ஆகும். இதற்கு மேல் அரசியல் தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. நான் எம்ஜிஆர் ரசிகன், திமுகவில் இருந்தேன்
சினிமா தியேட்டர்களில் இன்று கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு சென்று ஏழை மக்களால் படம் பார்க்க முடியவில்லை என்பது எனது கருத்தாகும்.
லட்சிய திமுக கட்சி அப்போது தேவைப்பட்டது. அப்போது திமுக நபராக இருந்தேன். கருணாநிதியை ஏற்றுக் கொண்டேன். எம்.ஜி.ஆர் ரசிகன், ஆனால் திமுக குடும்பமாக இருந்தேன். யார் கட்சிக்கும் பின்னர் செல்லவில்லை. தற்போது அரசியல் கருத்துக்கள் பேச வேண்டாம் என நினைக்கிறேன்.
காமெடி தட்டுப்பாடு
நடிகர் விஜய் எனக்கு நல்ல நண்பர். புலி ஆடியோ ரிலீஸிற்கும் சென்று இருந்தேன். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அமெரிக்கா சென்று சிகிச்சை அளித்தார்கள். பின்னர் என் குறித்து தவறான தகவல் பரப்பினார்கள். என் தலைமுடி கொட்டி விட்டது என்றார்கள். எனக்கு என்ன நடந்தாலும் என் தாய் மண்ணில் நடக்க வேண்டும் என நினைத்தேன். என் மகன் கேட்டுக் கொண்டதாலே அமெரிக்கா சென்றேன். இப்போது காமெடி நடிகர்களுக்கு சினிமாவில் தட்டுப்பாடு. நான் ஒரு படம் எடுத்து வருகிறேன். அதில் பல காமெடி நடிகர்களை உருவாக்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.