ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிரைலர் 5 மொழிகளில் யு டியூபில் கடந்த மாதம் வெளியானது. 5 மொழிகளையும் சேர்த்து தற்போது 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தெலுங்கில் 53.4 மில்லியன், ஹிந்தியில் 73.6 மில்லியன், தமிழில் 10.6 மில்லியன், கன்னடத்தில் 8.8 மில்லியன், மலையாளத்தில் 3.8 மில்லியன் என மொத்தமாக 150.2 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.
'பாகுபலி 2' டிரைலருடன் ஒப்பிடும் போது 'ஆர்ஆர்ஆர்' டிரைலரின் பார்வை குறைவாகவே உள்ளது. 'பாகுபலி 2' தெலுங்கு டிரைலர் 5 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இதுவரை 65 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 122 மில்லியன் பார்வைகளையும், தமிழ் டிரைலர் 27 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படம் 5 மொழிகளில் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக 'பாகுபலி 2' டிரைலர் சாதனைகளை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். 'பாகுபலி 2' படத்திற்கு இருந்த பெரும் எதிர்பார்ப்பு, 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு இல்லை என்பதையே டிரைலருக்கான பார்வைகளை புரிய வைக்கிறது.