ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடிவர். அதனால், தெலுங்கு சினிமா, பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அவர்களது நடனம், வீடியோக்களை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
நேற்று 'புஷ்பா' படத்தின் 'ஸ்ரீ வள்ளி' பாடலுக்கு டேவிட் வார்னர் நடனமாடி ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் எமோஜிக்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவிற்கு மட்டுமே 21 லட்சம் லைக்குகள் வந்துள்ளன.
மேலும், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடுவது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார் டேவிட் வார்னர். இன்று வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் அவருடைய மூன்று குட்டி மகள்கள் 'புஷ்பா' படத்தின் 'சாமி சாமி' வீடியோவிற்கு நடனமாடிய ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார் டேவிட் வார்னர். “அப்பா, அம்மா முன்பு குழந்தைகள் 'சாமி சாமி' பாடலுக்கு நடனமாடி முயற்சி செய்துள்ளார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.