ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
வெளியான நாள் முதலே நல்ல வசூலைக் குவித்து வரும் இப்படம் கடந்த இரண்டு வாரங்களில் பல வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது. தற்போது ஹிந்தியில் அதிக 'நிகர' வசூலைக் குவித்துள்ள படம் என்ற புதிய சாதனையைப் புரிந்துள்ளது. ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில் 632 கோடி வசூலித்து அந்த சாதனையைப் புரிந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், உலக அளவில் மொத்தமாக 1508 கோடியை வசூலித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். இனி வரும் நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் என்பதால் 'புஷ்பா 2' வசூல் மேலும் அதிகாரிக்க வாய்ப்புள்ளது.