சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளிவந்த படம் 'மகாராஜா'. இந்தப் படம் கடந்த மாதம் சீனாவில் பெரும் அளவில் வெளியானது. சீன ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்தப் படம் அங்கு வசூல் சாதனை படைத்துள்ளது.
அங்கு இதுவரையில் 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 86 கோடி ரூபாய் மதிப்பு. விரைவில் அந்த வசூல் 100 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'பாகுபலி 2' படம் சீனாவில் வெளியாகி மொத்தமாக 80 கோடியை மட்டுமே வசூலித்தது. தற்போது அந்த வசூல் சாதனையை 'மகாராஜா' படம் முறியடித்துள்ளது.
தமிழ் நடிகர்களின் படங்கள் சீனாவில் வெளியாகி சில கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள வசூல் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரை விடவும் விஜய் சேதுபதி சீனாவில் முதன் முதலில் ஒரு வசூல் சாதனையைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.