'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் ஹிந்தியில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. அதனுடைய முழுமையான தியேட்டர் ஓட்டத்தில் மொத்தமாக 511 கோடி வசூலுடன் அது நிறைவுக்கு வந்தது.
அந்த வசூலை 11 நாட்களில் முறியடித்திருக்கிறது 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்து வெளிவந்த இந்தப் படத்திற்கு முதல் நாளில் இருந்தே ஹிந்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. தற்போது அதன் வசூல் 560 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இதன் மூலம் தென்னிந்திய மொழிகளிலி இருந்து ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை 'புஷ்பா 2' பெற்றுள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் 511 கோடிகளுடன் 'பாகுபலி 2' படம் இரண்டாவது இடத்திலும், 'கேஜிஎப் 2' படம் 435 கோடிகளுடன் மூன்றாவது இடத்திலும், 294 கோடிகளுடன் 'கல்கி 2898 ஏடி' படம் நான்காவது இடத்திலும், 276 கோடிகளுடன் 'ஆர்ஆர்ஆர்' படம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.




