ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்திய சினிமாவிற்கே பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜா. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆண்டாள், ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களுடன் இளையராஜாவும் சென்றதாகவும், ஆனால் இளையராஜாவை மட்டும் வெளியில் நிற்குமாறு கோவில் பட்டர்கள் தெரிவித்ததாகவும், அங்கிருந்தபடி அவருக்கு மரியாதை செய்யப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக மதுரை மண்டல அறநிலைத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தம் மண்டபத்தில் மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல கோயில் வழக்கப்படி அனுமதி இல்லை. இதுபற்றி இளையராஜாவிடம் திரிதண்டி ஜீயர் தெரிவித்தார். இளையராஜாவும் ஏற்றுக்கொண்டு அர்த்த மண்டபம் முன்பு நின்று தரிசனம் செய்தார்'' என தெரிவித்துள்ளார்.
பொதுவாக கோவில் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு கூட உள்ளே செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இளையராஜாவிற்கு மாலை, பரிவட்டம் போன்ற மரியாதைகள் கோவில் பட்டர்கள் சார்பில் வழங்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.