'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதானார். பின் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இந்த நிலையில். சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் என்பவர் அவருக்கு எதிராக திரும்பி, திலீப் ஜாமினில் வெளிவந்தபின் நடிகை கடத்தல் சம்பந்தமான வீடியோ கிளிப்புகளை பார்த்தார் என சில பரபரப்பான தகவல்களை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்தார்
இதனை தொடர்ந்து இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் திலீப் மீது புதிய வழக்கு பதிவுசெய்தனர். மேலும் திலீப்பை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். நீதிமன்றமும் அதற்கான அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று நினைத்த திலீப், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல், தனக்கு முன்ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே நான்கு முறை இந்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம் சனிக்கிழமை அந்த மனுவை விசாரித்தது.
இதனை தொடந்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், “இன்றிலிருந்து (ஞாயிறு) தொடர்ந்து மூன்று நாட்கள் திலீப் கேரளா க்ரைம் பிராஞ்ச் போலீசார் முன்பு விசாரணைக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது காரணங்களை சொல்லி விசாரணைக்கு வராமல் தவிர்ப்பதோ, அல்லது வேறுவகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தினாலோ, அவருக்கு முன் ஜாமீன் கிடைப்பதையை அது தடைசெய்துவிட வாய்ப்பிருக்கிறது..
மேலும் திலீப்பிடம் செய்த விசாரணை குறித்து வரும் ஜன-27க்குள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஜன-27 அன்று இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடக்கும்.. அன்றைய தேதி வரை திலீப்பை போலீசார் கைது செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.