ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் நடிகைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். நடிகர்கள் சுரேஷ்கோபி, மம்முட்டி, துல்கர் சல்மானை தொடர்ந்து டிகை அன்னா பென்னுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹெலன் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் அன்னா பென். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார். கும்பளாங்கி நைட்ஸ், கப்பெல்லா படங்கள் மூலம் நடிப்பு திறனை நிரூபித்தவர். தற்போது நாரதன், என்னிட்டு அவசானம், காபா, நைட் டிரைவிங் படங்களில் நடித்து வருகிறார். அன்னா பென்னும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. வாசனை இழப்பு தவிர அத்தனை அறிகுறியும் இருந்தது. பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். மிகவும் கவனத்துடன் இரண்டு வருடங்களாக கொரோனாவிடமிருந்து தப்பி வந்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். என்று கூறியிருக்கிறார்.