கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” |

கோயம்புத்தூர் பொண்ணு ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய வாய்ப்புகள் எதுவும் இதுவரை அமையவில்லை. ஆனாலும் அவர் நடித்து முடித்துள்ள காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசுரன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த படங்கள் பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கிறது.
இந்த நிலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார் ஆத்மிகா. தடைபட்டு நிற்கும் படங்கள் வெளிவரவும், புதிய வாய்ப்புகள் கிடைக்கவும் அவர் வேண்டுதல் செய்துள்ளார். திருப்பதி சென்ற படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆத்மிகா "ஒளி, ஒளி, தெய்வீகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.