சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவில் தேர்தல் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தலைவர், பொதுச்செயலாளார், பொருளாளர் ஆகியோருடன், 2 துணைத்தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல் 12ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணியும், கே.பாக்யராஜும் தனித்தனி அணி அமைத்து போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிகுமார், ரவிமரியா, பொருளாளர் பதவிக்கு பேரரசு, செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.