டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் |
வினோத் இயக்கத்தில் அஜித், ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வலிமை‛. கொரோனா பிரச்னையால் இரு ஆண்டுகளாக தயாராகி வந்த இந்த படம் வெளியீடாக ஜன., 13ல் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் கொரோனா பரவல் அதிகமாகியது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஆகியது.
ஏற்கனவே கொரோனா பரவலை காரணம் காட்டி 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' என மற்ற பெரிய பான்- இந்தியா படங்கள் தங்கள் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள். ஆனால் வலிமை எப்படியும் வந்துவிடும் என்றும், தள்ளிப்போகலாம் என்றும் நேற்று முதலே சமூகவலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் போய் கொண்டிருந்தன. இந்நிலையில் வலிமை படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக படக்குழு சார்பில் வெளியிட்ட அறிக்கை : பார்வையாளர்களும், ரசிகர்களும் எப்போதும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக உள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும், அன்பும் கஷ்டங்களை எதிர்கொள்ளவும், எங்கள் கனவு திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் எங்களுக்கு முக்கிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
![]() |