ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு | ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் காக்க காக்க |

சமையலுக்கு பெயர் போனவர் மாதம்பட்டி ரங்கராஜ் 'மெஹந்தி சர்கஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லதா ஆர்.மணியரசு இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், யோகி பாபு, ஆத்மிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ் மேகி' . ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் ரங்கராஜ், ஆத்மிகாவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வருகிறது. இவர்களின் காதலை சேர்த்து வைக்க யோகிபாபு ஆங்கிலோ இந்தியன் பெண் போன்று வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.




