திருமணம் செய்து கொண்டு திருப்பதியில் செட்டிலாக ஆசைப்படும் ஜான்வி கபூர் | சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா |
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. கோவை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், அதன் பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மிஸ் மேகி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு அருகே ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் ஆத்மிகா. அதுகுறித்து அவர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது வறுமையில் வாழும் உயிர்களுக்கு உதவுவது தான் ஆன்மிகத்தின் உச்சமாகும். சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வருகிறது. அதனால் கூடிய சீக்கிரமே சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் ஆத்மிகா.