'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த ஞாயிறு(செப்., 10) அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது, வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது, பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நான்காய்ந்து வாயில்கள் ஏற்பாடு செய்யாதது, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டது என பல்வேறு குளறுபடிகள் நடந்தன.
சரியான ஏற்பாடுகளைச் செய்யாமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலரும் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இதுபற்றி சமூகவலைதளங்களில் பலரும் தங்களது குமுறல்களை கொட்டித் தீர்த்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடிகளால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு அவப்பெயரை தேடித் தந்துவிட்டது. என்னதான் இதற்கு பொறுப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்றாலும் அதில் ரஹ்மானுக்கும் பங்கு உள்ளது என ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். குறிப்பாக இது மிகப்பெரிய மோசடி என தெரிவித்தனர்.
நானே பொறுப்பேற்கிறேன்
இதற்கிடையே ‛‛அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், உங்களது டிக்கெட் காப்பியை அனுப்பி வைக்கவும். எங்களது குழுவினர் உடனடியாக பதில் கொடுப்பார்கள்'' என ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், ‛‛என்னை சிலர் ஆடு என்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நானே பலியாடு ஆகிறேன். நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்ப வரும் காலங்களில் சென்னையில் உலகத் தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
ரஹ்மானுக்கு ஆதரவு
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடிக்கு ரஹ்மானை குற்றம் சொல்வது சரியல்ல என ஒரு சாரர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா, குஷ்பு, கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் ரஹ்மானின் மகளான கதீஜாவும் தனது தந்தைக்கு ஆதரவு தெரிவித்து, அவரை மோசடியாளர் என கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மகள் கோபம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடி செய்தவர் என்று கூறுகின்றனர். இந்த இசை நிகழ்ச்சியை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதே 100 சதவீதம் தவறு உள்ளது .ஆனால் அதற்கான பொறுப்பை என் தந்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் என் தந்தை மோசடி செய்வது போன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன் கேரள மழை வெள்ளம், கோவிட் பாதிப்பு உள்ளிட்ட காலங்களில் என் தந்தை இசை நிகழ்ச்சி நடத்தி, அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அதேப்போல் லைட் மேன்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார். அவரை பற்றி தவறாக பேசும் முன் இதையெல்லாம் கொஞ்சம் நினைத்து பாருங்கள்'' என கோபமாக பதில் கொடுத்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி மாற்றம்
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக துணை கமிஷனர் தீபா சத்யன் மாற்றப்பட்டுள்ளார். போலீசாரின் நடவடிக்கையால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து இவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.