'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, படங்களில் நடித்தார். நராகாசுரன் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் ஆத்மிகா, உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த 'கண்ணை நம்பாதே' படம் நாளை வெளிவருகிறது.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது: ஒவ்வொரு நடிகைக்கும் தங்களின் திறமையை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 'கண்ணை நம்பாதே' எனக்கு அப்படிப்பட்ட ஒரு படம். இது என் சினிமா பயணத்தில் முக்கியமானதொரு படமாக இருக்கும். மு. மாறன் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது, கதையோடு ஒன்றி விட்டேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பது போல் இருந்தது. அவருடைய எழுத்தாற்றலில் உள்ள திறமை, அதை காட்சியனுபவமாக மாற்று விதம் அபாரமானது.
உதயநிதி உடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம். அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை முடித்துள்ளார். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலர் நடித்திருந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவமுள்ள ஒரு படம். இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்றார்.