கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு நடித்த சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா கேரக்டரில் கங்கனாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கங்கனா ரணவத் தனது போர்ஷனை நடித்து முடித்து படப்பிடிப்பு குழுவினருடன் விடைபெற்றுள்ளார்.
அவர் ராகவா லாரன்சுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: சந்திரமுகி 2 படத்தில் என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. இங்கு நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களுக்கு விடைகொடுக்கிறேன் என்பது கடினமாகத்தான் உள்ளது.
இத்தனை நாட்களில் இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலும் நாங்கள் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக, நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை. உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி, என கூறியுள்ளார் கங்கனா.
“மிஸ் யூ கங்கனா மேடம்” என்ற கேக்கை வெட்டி இயக்குனர் பி.வாசு உள்ளிட்ட படக்குழுவினர் கங்கனாவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.