ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கொரோனா கால நாயகன் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சோனுசூட் என்று சொல்லும். அந்த அளவுக்கு கொரோனா முதல் அலையில் இருந்து இப்போது வரைக்கும் மக்களுக்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள், தொழிலாளர்களை விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வந்தது. மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது. மருத்துவ பணியாளர்களுக்கு தனது ஓட்டலை வழங்கியது உள்பட ஏராளமான பணிகளை செய்தார்.
இரண்டாவது அலையில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கினார். வேலை வாய்ப்புக்கான ஒருங்கிணைப்புகளை செய்தார். தற்போது பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார். பஞ்சாப் மாநிலம் மேகா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள், மற்றும் சமூக சேவகர்களுக்கு ஆயிரம் சைக்கிள்களை வழங்கினார். இதன் மூலம் சுமார் 45 கிராமப்புற பள்ளி மாணவிகள் பயன் அடைந்தனர்.
இதுகுறித்து சோனுசூட் கூறியிருப்பதாது: பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருப்பதால், கடும் குளிரில் மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வது சிரமமாக உள்ளது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரித்துள்ளது. அதனால் இந்த பணியை துவங்கி உள்ளேன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதியுடைய மாணவர்களைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். என்றார்.




