எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
அகண்டாவின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பாலகிருஷ்ணா நடிக்கும் அவரின் 107வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். சமீபத்தில் ரவிதேஜா நடித்த கிராக் படத்தை இயக்கியவர் இவர். இந்த படத்திற்கு தற்காலிகமாக என்பிகே107 என்று தலைப்பு வைத்துள்ளார்.
இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயம்மா என்ற கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் திமிரு படத்தில் நடித்த மாதிரியான வில்லி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதில் கன்னட நடிகர் துனியா விஜய் முக்கிய வில்லனாக நடிக்கிறார், இதன் மூலம் அவர் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, எஸ்.தமன் இசை அமைக்கிறார். ஒரே தெலுங்கு படத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி நாயகியாவும், சரத்குமார் மகள் வரலட்சுமி வில்லியாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.